ADDED : மார் 25, 2024 05:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம்: மயிலம் தொகுதியில் உள்ள பெரிய தச்சூரில் தி.மு.க., வினர் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனர்.
மயிலம் அடுத்த பெரியதச்சூர் ஊராட்சியில் ஆரணி லோக்சபா தேர்தல் வேட்பாளர் தரணிவேந்தனை ஆதரித்து மயிலம் ஒன்றிய தி.மு.க., சார்பில் அரசின் சாதனைகளைக் கூறி கடைகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து துண்டு பிரசுரத்தை வழங்கினர்.
முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ஒன்றிய செயலாளர் சேதுநாதன், மணிமாறன் தலைமை தாங்கினர். ஒன்றிய கவுன்சிலர் அஞ்சலாட்சி கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சேகர், தொ.மு.ச., கிருஷ்ணமூர்த்தி மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் குமார், பாலு, நிர்வாகிகள் மாரிமுத்து, வெங்கடேசன், செல்வம், ரமேஷ், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.

