/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் நாளை தி.மு.க., மவுன ஊர்வலம்
/
விழுப்புரத்தில் நாளை தி.மு.க., மவுன ஊர்வலம்
ADDED : ஆக 06, 2024 06:56 AM
விழுப்புரம் : முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, விழுப்புரத்தில் தி.மு.க., சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி அறிக்கை:
விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் இருந்து, நாளை 7ம் தேதி காலை 8:00 மணிக்கு, எனது தலைமையில், விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் வரை அமைதி ஊர்வலம் நடக்கிறது. தொடர்ந்து கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இதில், மாவட்ட நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.