/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஊராட்சி தலைவர் மீது பொய் வழக்கு ரத்து செய்யக்கோரி தே.மு.தி.க., மனு
/
ஊராட்சி தலைவர் மீது பொய் வழக்கு ரத்து செய்யக்கோரி தே.மு.தி.க., மனு
ஊராட்சி தலைவர் மீது பொய் வழக்கு ரத்து செய்யக்கோரி தே.மு.தி.க., மனு
ஊராட்சி தலைவர் மீது பொய் வழக்கு ரத்து செய்யக்கோரி தே.மு.தி.க., மனு
ADDED : மே 06, 2024 05:54 AM
விழுப்புரம் : தேர்தல் முன்விரோதத்தில் ஊராட்சி தலைவர் மீதான பொய் வழக்கை ரத்து செய்யக் கோரி, தே.மு.தி.க., நிர்வாகிகள், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மனு விபரம்:
விக்கிரவாண்டி அடுத்த ஆசூர் கிராம ஊராட்சி தலைவர் ஞானசேகரன். விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தே.மு.தி.க., செயலாளராக உள்ளார். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்ட பிரசாரம் கடந்த ஏப்ரல் 17ம் தேதி முடிவடைந்தது.
அவர் மீதுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்த அன்பரசன் என்பவர், ஞானசேகரன் மீது விக்கிரவாண்டி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில், உண்மை தன்மையை அறியாமலும், ஞானசேகரனின் கருத்திற்கு மதிப்பு அளிக்காமலும் விக்கிரவாண்டி போலீசார் வன்கொடுமை வழக்கு பதிந்துள்ளதாக அறிகிறோம். இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. வேண்டுமென்றே புகார் அளித்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.