/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேறும்: அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜ் உறுதி

ADDED : ஏப் 17, 2024 11:42 PM

விழுப்புரம் : மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவேன் என விழுப்புரம் அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜ் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்க விழுப்புரம் கிளை நிர்வாகிகளை சந்தித்து, அ.தி.மு.க., வேட்பாளர் பாக்கியராஜ் ஆதரவு திரட்டினார். முன்னாள் மாவட்ட அரசு சிறப்பு வழக்கறிஞரான கவுன்சிலர் ராதிகா உடனிருந்தார். அப்போது, தமிழ்நாடு மாநில நர்சிங் ேஹாம் போர்டு பொருளாளர் திருமாவளவன், இந்திய மருத்துவ சங்கத்தின் கிளை தலைவர் டாக்டர் தங்கராஜ், செயலாளர் சவுந்தர்ராஜன், பொருளாளர் செல்வகுமார் ஆகியோர், மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகளை தெரிவித்தனர்.
அதில், மருத்துவமனை மற்றும் டாக்டர்கள் மீதான தாக்குதலிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். அரசு டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குற்ற வழக்கு முறையிலிருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். மருத்துவர்களை அச்சுறுத்தும் சட்டங்களை சீரமைத்திட வேண்டும். நெக்ஸ்ட் உடனான நீட் இணைப்பை நீக்க வேண்டும். இந்திய மருத்துவ கல்லுாரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களுக்கு உரிமம் அளிக்கும் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்தனர்.
கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க பாடுபடுவேன் என வேட்பாளர் பாக்கியராஜ் உறுதி அளித்தார்.