/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் புகைப்பட அட்டை இல்லையா? வேறு ஆவணங்களைப் பயன்படுத்தலாம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

ADDED : மார் 30, 2024 06:27 AM

விழுப்புரம் : லோக்சபா தேர்தலில், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இல்லாத நிலையில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களை பயன்படுத்தலாம்.
மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி செய்திக்குறிப்பு:
தேர்தலில் ஆள்மாறாட்டம் செய்து ஓட்டளிப்பதை தவிர்க்க தேர்தல் ஆணையத்தின் செலவில் வாக்காளர்களுக்கு, புகைப்படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 100 சதவீதம் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட வாக்காளர்கள் அந்த புகைப்பட அடையாள அட்டையை காண்பித்து, வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும். புகைப்பட அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை திட்ட அடையாள அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை.
ஓட்டுநர் உரிமம், வருமான வரி கணக்கு எண் அட்டை, மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்கள் வழங்கிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட அடையாள அட்டைகளை காண்பித்து ஓட்டளிக்கலாம்.
வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில், அச்சுப்பிழைகள், எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.