/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
யூசர் ஐடி, பாஸ்வேர்டு, ஓ.டி.பி.,யை ேஷர் செய்ய வேண்டாம்: அண்ணா பல்கலை., முன்னாள் இயக்குனர் நாகராஜன் 'அட்வைஸ்'
/
யூசர் ஐடி, பாஸ்வேர்டு, ஓ.டி.பி.,யை ேஷர் செய்ய வேண்டாம்: அண்ணா பல்கலை., முன்னாள் இயக்குனர் நாகராஜன் 'அட்வைஸ்'
யூசர் ஐடி, பாஸ்வேர்டு, ஓ.டி.பி.,யை ேஷர் செய்ய வேண்டாம்: அண்ணா பல்கலை., முன்னாள் இயக்குனர் நாகராஜன் 'அட்வைஸ்'
யூசர் ஐடி, பாஸ்வேர்டு, ஓ.டி.பி.,யை ேஷர் செய்ய வேண்டாம்: அண்ணா பல்கலை., முன்னாள் இயக்குனர் நாகராஜன் 'அட்வைஸ்'
ADDED : ஜூலை 01, 2024 06:21 AM

விழுப்புரம் : 'மாணவர்கள் தெளிவாக சிந்தித்து, இன்ஜினியரிங் கல்லுாரியையும், படிப்புக்கான சாய்ஸை கொடுக்க வேண்டும்' என அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முன்னாள் இயக்குனர் நாகராஜன் பேசினார்.
விழுப்புரத்தில் நடந்த தினமலர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
முதலில் இன்ஜினியரிங் கல்லுாரி எங்குள்ளது, எவ்வளவு பாடப்பிரிவுகள் உள்ளது. கல்லுாரி துவங்கி தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆகிறது. கட்டணம், இடவசதி போன்றவற்றை பார்க்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் அந்த கல்லுாரியின் தரம் குறித்து, பல்கலைக்கழக வெப்சைட்டிலேயே தெளிவாக உள்ளது.
விரைவில் ரேங்க் பட்டியல் வெளயிட உள்ளது. அதில் ஓவர் ஆல் ரேங்க், ஜாதி வாரி இட ஒதுக்கீடு ரேங்க், அதன் கட் ஆப் மதிப்பெண் குறிப்பிட்டிருக்கும். அதனை வைத்து, உங்கள் சேர்க்கை நிலையை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
உடனே கல்லுாரியை தேர்வு செய்வதற்கான சாய்ஸ் லிஸ்ட்டை நீங்கள் தயார் செய்ய வேண்டும். ஒரே பெயரில் பல கல்லுாரிகள் இருக்கும். இதனால் கல்லுாரிக்கான கோடு எண்ணை பயன்படுத்த வேண்டும்.
கல்லுாரி சாய்ஸ் பதிவதில் கவனமாக இருக்க வேண்டும். முதல் 3 நாட்கள் அதற்கான வாய்ப்பு கொடுக்கப்படும். அதற்குள் 1, 2, 3 என உங்களுக்கான கல்லுாரி, படிப்புகளை தேர்வு செய்து, சாய்ஸ் வழங்கி அந்த 3 நாட்களுக்குள் லாக் செய்து விட வேண்டும். அதன் பிறகு, உங்களுக்கான டெண்டேட்டிவ் அலாட்மெண்ட் வந்துவிடும். 2 நாட்களுக்குள் அதில் ஒன்றை கன்பார்ம் செய்ய வேண்டும். 6வது நாளில் பைனல் அலாட்மெண்ட் வந்துவிடும்.
அதனை தேர்வு செய்து உரிய கல்லுாரிக்குச் சென்று கட்டணம் செலுத்தி, 5 நாட்களுக்குள் கல்லுாரியில் சேர்ந்து விட வேண்டும்.
முன்னதாக கல்லுாரி, படிப்புகளை தேர்வு செய்ய தொடர் ஆப்ஷன்கள் உள்ளது. ஆன் லைன் போர்டல் பதிவுக்கு, அதற்காக ஒதுக்கியுள்ள கல்லுாரி மையங்களுக்கும் செல்லலாம். இந்தப் போர்ட்டல் சிம்பிளான சாப்ட்வேர் மூலம் எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் தான் கொடுத்துள்ளது.
ஒருபோதும் உங்களது யூசர் ஐடி, பாஸ்வேர்டு, ஓ.டி.பி., போன்றவற்றை ஷேர் செய்ய வேண்டாம். ஏனெனில் யாராவது அதில் தவறாக பதிவு செய்து உங்கள் சாய்ஸை மாற்றி விட வாய்ப்பு உண்டு. இதே போல், கல்லுாரி, படிப்பை தேர்வு செய்வதற்கு எளிமையான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது.
அரசு கல்லுாரி, அரசு உதவி பெறும் கல்லுாரி, தனியார் கல்லுாரி அல்லது குறிப்பிட்ட கோர்ஸ் என்பதை நீங்கள் செலக்ட் செய்தால், அது மட்டுமே டிஸ்ப்ளேவில் தெரியும். கட் ஆப் மார்க், ரேங்க் லிஸ்ட் வைத்து, உங்களுடைய கல்லுாரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்ய வேண்டும். அதிகளவில் சாய்ஸ் லிஸ்ட் கொடுத்தால் நல்லது தான். முதல் அலாட்மெண்டில் கிடைக்கவில்லை எனில் அடுத்த அடுத்த அலாட்மெண்டில் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத சலுகை உண்டு. ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் 500 சீட்களும், மாற்றுத்திறனாளிகள் கோட்டாவில் 5 சதவீதம் சீட்களும், முன்னாள் ராணுவத்தினருக்கு 150 சீட்களும் வாய்ப்புள்ளது. 7.5 சதவீதம் அரசு ஒதுக்கீடு சேரும் மாணவர்களுக்கும், முதல் பட்டதாரி மாணவர்கள் இலவசம்.
இவ்வாறு நாகராஜன் பேசினார்.