ADDED : ஜூன் 25, 2026 03:20 PM
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் சங்கர் கணேஷ் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றங்கள் பற்றியும், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் பற்றியும் மாணவர்களிடையே பேசினார்.
தொடர்ந்து ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியா வாக்கி என்பவரால் உருவாக்கப்பட்ட இயற்கை மரம் வளர்ப்பு முறையை பின்பற்றி, பள்ளி வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இன்ஸ்பெக்டர் தலைமையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நட்டனர்.
முன்னதாக கண்டாச்சிபுரம் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் மாணவர்களுக்கு வினாடி–வினா நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கணபதி நன்றி கூறினார்.
