/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவ கல்லுாரியில் போதை மறுவாழ்வு மையம்
/
அரசு மருத்துவ கல்லுாரியில் போதை மறுவாழ்வு மையம்
ADDED : பிப் 28, 2025 05:30 AM

விக்கிரவாண்டி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் துவக்க விழா நடந்தது.
சென்னையில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளில் ஒருங்கிணைந்த 25 போதை மீட்பு சிகிச்சை மறுவாழ்வு மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதனையொட்டி விழுப்புரம் அரசு மருத்துவக் கலலுாரியில் நடந்த விழாவில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்துவிளக்கேற்றினார். துறைத் தலைவர் புகழேந்தி வரவேற்றார் மாவட்டச் சேர்மன் ஜெயச்சந்திரன், கல்லுாரி டீன் ரமாதேவி, இணை இயக்குனர் ரமேஷ் பாபு, ஆர் எம் ஓ., ரவிக்குமார், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ராஜவேல், உதவி பொறியாளர் இம்ரான் கான், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் இளவரசி, ஊராட்சி தலைவர் சந்திரசேகர், துணைத் தலைவர் தினேஷ்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.