ADDED : மே 08, 2024 11:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : காணை அருகே போதையில் வாலிபரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காணை அடுத்த கொண்டங்கி கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சுரேஷ், 42. இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மனநலம் பாதித்து, சென்னை, அம்பத்துாரில் உள்ள சிகிச்சை மையம் ஒன்றில், சிகிச்சை பெற்று கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீடு திரும்பினார். இவரை பார்ப்பதற்கு நேற்று முன்தினம் இவரை, உறவினரான எரளூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ்,22; என்பவர் வீட்டிற்கு வந்தார்.
அங்கு, இருவரும் மது அருந்திய போது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு, சுரேஷ், ஆனந்தராஜை திட்டி, தாக்கினார். காணை போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ கைது செய்தனர்.