/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீடு புதுப்பிக்க பணம் வழங்காததை கண்டித்து முதியவர் தர்ணா
/
வீடு புதுப்பிக்க பணம் வழங்காததை கண்டித்து முதியவர் தர்ணா
வீடு புதுப்பிக்க பணம் வழங்காததை கண்டித்து முதியவர் தர்ணா
வீடு புதுப்பிக்க பணம் வழங்காததை கண்டித்து முதியவர் தர்ணா
ADDED : பிப் 28, 2025 05:39 AM

திருவெண்ணெய்நல்லுார்: வீட்டை பழுது நீக்கம் திட்டத்தில் பணம் வழங்காததை கண்டித்து முதியவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி. மழவராய நல்லுாரைச் சேர்ந்தவர் கண்ணன், 65; கூலித் தொழிலாளி. இவர் தனது வீடு சேதமானதால் வீட்டை பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் புதுப்பிக்க வேண்டி திருவெண்ணெய்நல்லுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்தார்.
அதன்பேரில், 52,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதிகாரிகள் பணி ஆணை வழங்கினர். வீட்டை கண்ணன் பழுது நீக்கம் செய்து, பெயிண்ட் அடித்துள்ளார். ஆனால், பணி முடிந்து பல மாதங்கள் ஆகியும் பணம் வழங்காததால் பி.டி.ஓ., அலுவலகத்தில் விசாரித்த போது, வங்கிக் கணக்கில் பணம் அனுப்பியதாக தெரிவித்தனர்.
ஆனால், கண்ணன் பணம் வரவில்லை எனக் கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று காலை புகார் அளித்தார்.
பின், பணம் வழங்காததை கண்டித்து பி.டி.ஓ., அலுலகம் முன் தனது மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த பி.டி.ஓ., ரவி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன் பேரில், முதியவர் கலைந்து சென்றார்.

