/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பணத்திற்கும் பாசத்திற்கும் நடைபெறும் தேர்தல்: பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு
/
பணத்திற்கும் பாசத்திற்கும் நடைபெறும் தேர்தல்: பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு
பணத்திற்கும் பாசத்திற்கும் நடைபெறும் தேர்தல்: பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு
பணத்திற்கும் பாசத்திற்கும் நடைபெறும் தேர்தல்: பா.ம.க., தலைவர் அன்புமணி பேச்சு
ADDED : ஜூலை 01, 2024 06:17 AM

விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பணத்திற்கும் பாசத்திற்குமான தேர்தலாக உள்ளது' என பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி பாப்பனப்பட்டு, பனையபுரம் , பனப்பாக்கம், தொரவி, சிறுவள்ளிக்குப்பம், கயத்துார் ஆகிய இடங்களில் பா.ம.க .,வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து பசுமைத் தாயக தலைவர் சவுமியா பேசுகையில், 'இட ஒதுக்கீடு கேட்டு போராடிய இந்த மண். நம் பிள்ளைகள் அரசு நல்ல கல்வி பெறவும், வேலைவாய்ப்பு பெறவும் இட ஒதுக்கீடு கேட்டால் தரமாட்டேன் என்கிறார்கள். ஜாதிவாரி கணக்கு எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நம் வீட்டுப் பிள்ளைகள் நல்ல தரமான கல்வி பெறவும் அரசு வேலையில் அமரவும் இடைத்தேர்தலில் நமது வேட்பாளர் அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போடுங்கள்' என்றார்.
தொடர்ந்து மாநிலத் தலைவர் அன்புமணி பேசுகையில், 'பணத்திற்கும் பாசத்திற்கும் நடக்கும் இந்த தேர்தலில் பா.ம.க., வெற்றி பெற்றால் அடுத்த மாதம் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க மாட்டோம் என கூறி விட்டார். இந்த தேர்தலில் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் அவரது குடும்பம் நன்றாக இருக்கும்.
நமது வேட்பாளர் அன்புமணி வெற்றி பெற்றால் இட ஒதுக்கீடு கிடைக்கும்' என்றார்.
தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் பாலு, மாவட்ட செயலாளர் சிவக்குமார் எம்.எல்..ஏ., மாவட்ட தலைவர்கள் புகழேந்தி, தங்கஜோதி, பேராசிரியர் செல்வகுமார், மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி.மாவட்ட அமைப்பாளர்கள் பழனிவேல், மணிமாறன், பசுமை தாயகம் தீன வேலு, ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், ரவி, தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ராஜலட்சுமி, மணிகண்டன், த.மா.கா., மாவட்ட தலைவர் தசரதன் உட்பட பலர் பங்கேற்றனர்.