/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் நியமன அலுவலர்கள் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
/
தேர்தல் நியமன அலுவலர்கள் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
தேர்தல் நியமன அலுவலர்கள் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
தேர்தல் நியமன அலுவலர்கள் விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்
ADDED : ஜூன் 14, 2024 06:53 AM
விழுப்புரம்,: விழுப்புரம் மாவட்டத்தில், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மற் றும் பரிசு பொருட்கள் பறி முதல் செய்தால் உடனடியாக, தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி, விழுப்புரத்தில், தேர்தல் நியமன அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசியதாவது:
விக்கிரவாண்டி சட்ட சபை தொகுதிக்கான இடைத் தேர்தல் நடத்தை விதிகள் கடைபிடிக்கப்பட்டு வருவதோடு, தேர்தல் பணிகளை மேற்கொள்ள நியமன அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தபால் ஓட்டுகள் தொடர்பான முன்னேற்பாடு பணிகள், ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.
பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபடும்போது 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்தால் மாவட்ட தலைமை இடத்திற்கும், தேர்தல் நடத்தும் அலுவலருக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் பேசினார்.
கூட்டத்தில் சப் கலெக்டர் திவ்யான்சு நிகாம், தேர்தல் பிரிவு அலுவலர் தமிழரசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.