/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நெருக்கடியில் தேர்தல் அலுவலர்கள்
/
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நெருக்கடியில் தேர்தல் அலுவலர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நெருக்கடியில் தேர்தல் அலுவலர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நெருக்கடியில் தேர்தல் அலுவலர்கள்
ADDED : ஜூலை 02, 2024 06:09 AM
கடந்த ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடந்து, அதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. தி.மு.க., அ.தி.மு.க., தே.ஜ., கூட்டணி என மும்முனைப் போட்டி நிலவியது.இதனால் தேர்தலை சுமுகமாக நடத்த தேர்தல் துறையினர் கடும் சிரமப்பட்டனர்.
இந்த கசப்பான சம்பவங்கள் மறைவதற்கு முன்விக்கிரவாண்டி தொகுதியில், இடைத்தேர்தல் அறிவித்து வெளியானது. இந்த அறிவிப்பு தேர்தல் அதிகாரிகளுக்கு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது.
இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காது எனக்கூறி அ.தி.மு.க., போட்டியில் பின்வாங்கிக் கொண்டதால், தி.மு.க., பா.ம.க.,வுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
தி.மு.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வரும் நிலையில், பா.ம.க., ராமதாசின் சொந்த மாவட்டமாகவும், செல்வாக்குள்ள தொகுதி என்பதால் தேர்தலில் வெற்றி பெற, ராமதாஸ், அன்புமணி, மணி உள்ளிட்டோர் தீவிரமாக இறங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் இருதரப்பின் நெருக்கடி காரணமாக, தேர்தல் துறையினர் அதிருப்தியில்உள்ளனர்.
விக்கிரவாண்டியில் வேட்பாளர்கள் இறுதி செய்யும் பணி நடந்தது. அப்போது, தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி, சுயேட்சைகளுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. இதில், ஒருவருக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுதேர்தல் துறைக்கும் லிஸ்ட் அனுப்பினர்.
இந்நிலையில், வி.சி.க.,வின் பானை சின்னம், சுயேச்சை சின்னமாக ஒருவருக்கு வழங்கப்பட்டதை பார்த்த அமைச்சர் பொன்முடி கடுப்பாகி, வேட்பு மனு பரிசீலனைக்கு சென்றிருந்த முக்கிய நிர்வாகிகளை, பிரசாரக்கூட்டத்திலேயே டோஸ் விட்டார்.
தற்போது நடந்த லோக்சபா தேர்தலில் பானை சின்னத்தில் தி.மு.க., கூட்டணி போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது.
உடனே, நடக்கும் இடைத்தேர்தலில் அதே பானை சின்னம் இடம்பெற்றால், விவரம் அறியாத வி.சி., கட்சியினரின் ஓட்டுகள் பானை சின்னத்துக்குபோக வாய்ப்புள்ளதாக கடிந்து கொண்டார். மேலும்அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான சின்னத்தை எப்படி ஒதுக்கினீர்கள் என கேட்டு, அமைச்சர் பொன்முடி தேர்தல் நடத்தும் அலுவலரையும், மாவட்ட தேர்தல் அதிகாரியையும் போனில் கடிந்து கொண்டுள்ளார்.
இதனால் அச்சமடைந்த தேர்தல் நடத்தும் அலுவலர், திடீரென உடல்நிலை பாதித்ததாக கூறி விடுமுறையில் சென்றுவிட்டாராம். இதனால் தான், அன்றைய தினம் சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டும், முறையான அறிவிப்பு இரவு தான் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து பா.ம.க., வக்கீல் பாலு உள்ளிட்டோர், பல புகார்களை தெரிவிக்க வந்தபோது, தேர்தல் நடத்தும் அலுவலர் வரவில்லைஎன அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 30 பேரும், 80 எம்.எல்.ஏ.,க்களும்பிரசாரத்திற்கு வந்துதேர்தல் விதிமீறலை அறங்கேற்றி வருகின்றனர்.
இறந்தவர்கள் ஓட்டுகளை, கள்ள ஓட்டு போட வாய்ப்பு இருக்கிறது. அரசியல் கட்சியின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆர்.டி.ஓ., அளவிலான தேர்தல் நடத்தும் அலுவலர் இருந்தால், அமைச்சர்கள் இடையே அவர் அச்சமின்றி பணியாற்ற முடியாது.
எனவேவெளிமாநில ஐ.ஏ.எஸ் .,அந்தஸ்திலான தேர்தல் நடத்தும் அலுவலக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இப்படி, பல புகார்களும் தொடர்வதால், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நெருக்கடியில் சிக்கித் தவித்து கொண்டுள்ளனர்.