/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உடைந்து விழும் நிலையில் மின் கம்பம்
/
உடைந்து விழும் நிலையில் மின் கம்பம்
ADDED : ஆக 12, 2024 06:17 AM

கண்டமங்கலம்: கண்டமங்கலம் அடுத்த கெண்டியங்குப்பம் அருகே சாலையோரத்தில் உள்ள மின் கம்பம் உடைந்து விழும் நிலையில் உள்ளது.
புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரியூர் மேம்பாலத்தில் இருந்து வடக்கே கெண்டியங்குப்பம், அனந்தபுரம் செல்லும் சாலையோரம், மின் கம்பங்கள் மூலம் இணை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
கெண்டியங்குப்பம் ரயில்வேகேட்டிற்கு தெற்கே 200 மீட்டர் தொலைவில் சாலையோரம் டிரான்ஸ்பார்மருக்கு அருகே உள்ள சிமென்ட் மின்கம்பத்தின், மையப் பகுதியில், உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
போக்குவரத்து நிறைந்த சாலையில் மின்கம்பம் உடைந்து விழுந்து விபரீதம் ஏற்படும் முன் மின்வாரிய அதிகாரிகள் உடைந்த மின் கம்பத்தை அகற்றி புதிய மின் கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.