ADDED : ஜூலை 18, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: சென்னை தனியார் பொறியியல் கல்லுாரி மாணவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் பாலமுரளிகிருஷ்ணன் மகன் சஞ்சய், 19; இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லுாரியில் பி.எஸ்சி., ஏ.ஐ., பிரிவு 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர், கடந்த 16ம் தேதி சென்னை – தியாகதுருகம் நோக்கி செல்லும் பஸ்சில் ஏறி வந்து கொண்டிருந்தார். இந்த பஸ் விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்த போது சஞ்சய் மொபைல் போன் ஸ்விட்ச் ஆப் ஆகியுள்ளது. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
உறவினர் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
