/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது கார் மோதல்; இன்ஜி., மாணவர் பலி
/
பைக் மீது கார் மோதல்; இன்ஜி., மாணவர் பலி
ADDED : பிப் 25, 2025 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; கிளியனுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் பொறியியல் மாணவர் இறந்தார்.
புதுச்சேரி, கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தீபன் (எ) தீபன்ராஜ், 22; இவர் சென்னை எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தில் இன்ஜினியர் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்று மாலை 3:40 மணிக்கு பைக்கில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக சென்றார்.
கிளியனுார் சோதனைச் சாவடி அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த தீபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து, கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

