/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
/
அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 12, 2024 11:07 PM

விழுப்புரம்: வானுார் அடுத்த டி.பரங்கினி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
டி.பரங்கினி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அவர்கள் வாழ் நிலை பகுதிகளில் உள்ள புவிசார் தன்மைகளை அறிந்து கொண்டு வாழ்வில் பயன்படுத்தும் வகையில், விந்தை விழுதுகள் என்ற முன்மாதிரி செயல்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, தொல்லியல் சார் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் புதை படிமங்கள் பற்றிய கருத்துரை, புதை படிமங்களின் உண்மை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதற்கான விழிப்புணர்வை ஆரோவில் பிச்சாண்டிகுளம் சுற்றுச்சூழல் நிறுவனம் சார்பில் நிர்வாகிகள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகள் தங்களின் கருத்துகளை கூறினர்.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெய்சாந்தி, சுற்றுச்சூழல் ஆசிரியர் இளங்கோவன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, ரேவதி, ஜெகஷீஜா, விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர் ேஹமலதா நன்றி கூறினார்.