/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்விக் கூடங்களில் சமத்துவம்; திண்டிவனத்தில் பரப்புரை மாநாடு
/
கல்விக் கூடங்களில் சமத்துவம்; திண்டிவனத்தில் பரப்புரை மாநாடு
கல்விக் கூடங்களில் சமத்துவம்; திண்டிவனத்தில் பரப்புரை மாநாடு
கல்விக் கூடங்களில் சமத்துவம்; திண்டிவனத்தில் பரப்புரை மாநாடு
ADDED : செப் 01, 2024 11:20 PM

திண்டிவனம் : திண்டிவனத்தில் 'கல்விக் கூடங்களில் சமத்துவம்' பரப்புரை மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு, ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினார். வழக்கறிஞர் பூபால் வரவேற்றார். பேராசிரியர் பிரபா கல்விமணி நோக்க உரையாற்றினார்.முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, ரகுபதி, ஆசிரியர் சிவகுருநாதன், பேராசிரியர் கோச்சடை கருத்துரை வழங்கினர்.
மாநாட்டில், ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தமிழக அரசிடம் சமர்பித்துள்ள கல்வி கூடங்களில் சமத்துவம் என்ற ஒரு நபர் குழுவின் அறிக்கையை அரசு காலம் தாழ்த்தாமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்.
தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதியின், கல்விக்கூடங்களில் சமத்துவம் என்ற நுாலை வெளியிட, திண்டிவனம் தமிழ்சங்கத் தலைவர் துரை ராஜமாணிக்கம் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், தமிழ்சங்கம் ஆறுமுகம், ரவிகார்த்திகேயன், ராஜேஷ், தீனா, பொன்மாரி, திண்டிவனம் நகர மன்ற துணைத் தலைவர் ராஜலட்சுமி, வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில், அரசால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.