/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
'பா.ஜ.விற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக போடும் ஓட்டு': மாஜி அ.தி.மு.க., அமைச்சர் ஆவேசம்

ADDED : மார் 27, 2024 11:21 PM
திண்டிவனம் : விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் திண்டிவனத்தில் நடந்தது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக மோடி ஆட்சி நடந்துள்ளது. 400 ரூபாய் சிலிண்டர் விலையை ஆயிரத்து 200 ரூபாயாக உயர்த்தினார். பெட்ரோல், டீசல் விலையை ரூ.100 வரை கொண்டு வந்தது மோடி தான். மத்திய அரசு பணிகளில் 13 லட்சம் வேலைகள் காலியாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் வெள்ளம், புயல் ஏற்பட்ட போது, ஒரு நாள் கூடவராத மோடி, தற்போது வராத்திற்கு மூன்று நாட்கள் வருகிறார். மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும், தமிழ்நாட்டு மக்கள் மதவாதிகளுக்கு ஓட்டு போடமாட்டார்கள். பா.ஜ.விற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், நம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக போடும் ஓட்டு.
தமிழ்நாட்டில் பி.சி., எம்.பி.சி., உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் சேர்த்து 93 சதவீதம் உள்ளனர். ஆனால் 7 சதவீதம் உள்ள மக்களுக்கு 10 சதவீதம் வழங்கப்படுகின்றது . அதனால்தான் பா.ஜ., ஜாதி வாரி கணக்கெடுப்பிற்கு எதிராக செயல்படுகின்றது. இதற்கு பா.ஜ.,உடன் கூட்டணி வைத்துள்ள பா.ம.க., ஏற்றுக்கொள்கிறது.
அமலாக்கத்துறை, சி.பி.ஐ., மற்றும் வருமானவரித்துறை அனைத்து கட்சிகளையும் மிரட்டுகின்றன. இரண்டு மாநில முதல்வரை கைது செய்து, சிறையில் அடைத்துள்ளது பா.ஜ., அரசு. இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால். மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் நாம் நடந்து கூட போக முடியாத சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர், பேசினார்.