/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெயருக்கு திறக்கப்பட்ட கண்காட்சி; பார்வையிட ஒருவரும் வரவில்லை செல்பி எடுத்து நடையை கட்டிய பணியாளர்கள்

ADDED : செப் 10, 2024 12:31 AM

விழுப்புரம் : கலெக்டர் வர மாட்டார் என்ற தகவல் தெரியாமல், 2 மணி நேரமாக கண்காட்சி முகாமை திறக்காமல், திட்டப் பணியாளர்கள் காத்திருந்தனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே ஊட்டச்சத்து மாதத்தையொட்டி விழிப்புணர்வு கண்காட்சி நேற்று அமைக்கப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், அமைக்கப்பட்ட ஸ்டாலில், சிறுதானிய உணவுகள் இடம் பெற்றிருந்தது.
சிறுதானியங்களான கேழ்வரகு, பணிவரகு, திணை, சாமை, வரகு, குதிரைவாலி, அரிசி, கோதுமை ஆகிய உணவு வகைகளை உட்கொள்வதின் அவசியம். மற்றும் இவற்றை பயன்படுத்துவதால், நீரிழிவு, ரத்த அழுத்தம், இருதய நோய்கள், உடல் பருமன், ரத்த சோகை போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் துண்டு பிரசுரங்கள் ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த ஸ்டால் காலை 9:00 மணிக்கு துணி பந்தல் அமைத்து, ரிப்பன் கட்டி தயாராக வைத்திருந்தனர். 11:00 மணி வரை ஸ்டால் திறக்கப்படவில்லை.
துறை பணியாளர்களிடம் கேட்டபோது, கலெக்டர் திறந்து வைப்பதற்காக காத்திருக்கிறோம் என்றனர்.
விழுப்புரத்தில் நேற்று காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் சென்ற தகவல் கூட, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு தெரியவில்லை.
பின்னர், 11:00 மணியளவில், கலெக்டர் வர வாய்ப்பில்லை என உறுதியானதும், அவசரமாக ஸ்டாலை திறந்தனர்.
பொதுமக்கள் இந்த கண்காட்சியை பார்வையிடவில்லை.
ஒருவழியாக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஸ்டாலில் நின்று 'செல்பி' எடுத்துவிட்டு நடையை கட்டினர்.