ADDED : மார் 01, 2025 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : வானுார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
இளைஞர் செஞ்சிலுவை சங்கம், உள்தர உறுதிப்பிரிவு, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி முதல்வர் வில்லியம் தலைமை தாங்கினார். செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் குணசேகரி வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் முகாமை துவக்கி வைத்தார். மாணவ, மாணவிகள், பெற்றோர் சிகிச்சை பெற்றனர். உள்தர உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் ஜார்ஜ் செல்லம்மாள் நன்றி கூறினார்.