/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடும்ப தகராறு: 4 பேர் மீது வழக்கு
/
குடும்ப தகராறு: 4 பேர் மீது வழக்கு
ADDED : செப் 14, 2024 07:38 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே குடும்ப தகராறில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அருங்குறுக்கை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அய்யனார், 45; விவசாயி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது தம்பி ராஜிவ்காந்தி என்பவருக்கும் நிலம் சம்மந்தமாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி மாலை 5:30 மணியளவில் திடீரென இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ராஜிவ்காந்தி, மகாலிங்கம், பிரியங்கா, புஷ்பா ஆகிய நான்கு பேர் சேர்ந்து அய்யனாரை தாக்கியுள்ளனர்.
இது குறித்து அய்யனார் திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் ராஜிவ்காந்தி, மகாலிங்கம், பிரியங்கா, புஷ்பா ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிந்து ராஜிவ்காந்தியை, 40; கைது செய்தனர்.