/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சாவு
/
டிராக்டர் கவிழ்ந்து விவசாயி சாவு
ADDED : ஜூன் 03, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், விவசாயி உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம், அரசூரை சேர்ந்தவர் காண்டீபன்,45; விவசாயி. இவர், நேற்றிரவு 8:00 மணிக்கு டிராக்டரில் வைக்கோல் லோடு ஏற்றி கொண்டு விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து அரசூர் நோக்கி சென்றார்.
திருப்பாச்சனுார் கிராமத்தில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த காண்டீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.