ADDED : ஆக 19, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டக்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.
சகாபுதீன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ., மாவட்ட செயலாளர் சவுரிராஜன், பொருளாளர் மணிகண்டன், துணைச் செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், துணைத் தலைவர் மாசிலாமணி, நிர்வாகிகள் சபாபதி, ராஜேஷ், ஆனந்தன், வீரப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், அனைத்து ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களையும் துார்வாரக் கோரி வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.