/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் சங்கத்தினர் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 11, 2024 11:19 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டச் செயலர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.
இந்திய கம்யூ., மாவட்டச் செயலர் சவுரிராஜன், விவசாய சங்க மாவட்டத் தலைவர் சகாபுதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
வேளாண்துறையில் மானாவாரி சாகுபடிக்கென தனித்துறை அமைக்க வேண்டும்.தானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
மானாவாரி சாகுபடியைக் காத்திட, ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் ஊக்க மானியம் வழங்க வேண்டும். இடுபொருள்களை 75 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாவட்டத் துணை செயலாளர்கள் மூர்த்தி, பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் மாசிலாமணி, லட்சுமி, மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.