நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : தாய் வீட்டிற்கு சென்ற பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் வி.மருதுார் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி தமிழ்செல்வி, 45; கடன் பிரச்னையால் தவித்து வந்துள்ளார். கடந்த மாதம் 10ம் தேதி, கடலுாரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வருவதாக கூறிச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.