நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் குடும்ப தகராறில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம், கே.கே.ரோடு ராஜிவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் ரவி மகன் அய்யப்பன், 36; கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி, 35. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்தது. 17 ம் தேதி அய்யப்பனுக்கும், சங்கரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விரக்தியடைந்த சங்கரி வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரை மீட்ட உறவினர்கள், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.