/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு கல்லுாரியில் 5ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
/
அரசு கல்லுாரியில் 5ம் தேதி இறுதி கட்ட கலந்தாய்வு
ADDED : ஆக 02, 2024 01:55 AM
விழுப்புரம்,: விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில் இந்தாண்டிற்கான இறுதிக் கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 5ம் தேதி துவங்குகிறது.
கல்லுாரி முதல்வர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:
வரும் 5ம் தேதி பி.காம்., வணிகவியல் தகுதி மதிப்பெண் 299 முதல் 250 வரையிலும், 6ம் தேதி வணிகவியல் தகுதி மதிப்பெண் 249 முதல் 195 வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வில் பங்கேற்போர், பதிவிறக்கம் செய்த விண்ணப்பம், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச்சான்று அசல் மற்றும் இரு நகல்கள், பாஸ்போர்ட் புகைப்படம் 3, பெற்றோர் அல்லது பாதுகாவலர் புகைப்படம் 1, வங்கி கணக்கு புத்தக முதல்பக்க நகல் 1, ஆதார் நகல் 2, உரிய சேர்க்கை கட்டணத்தோடு வர வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.