/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இரு சக்கர வாகன சர்வீஸ் சென்டரில் தீ
/
இரு சக்கர வாகன சர்வீஸ் சென்டரில் தீ
ADDED : ஆக 01, 2024 07:19 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் இரு சக்கர வாகன சர்வீஸ் சென்டரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகன ஷோரூம் அமைந்துள்ளது. இந்த ஷோரூமின் கீழ் தளத்தில் வாகனங்களை சர்வீஸ் செய்யும் இடம் உள்ளது.
இங்கு, நேற்று முன்தினம் இரவு 11:20 மணியளவில் கரும்பு புகை வெளியேறியது. தகவலறிந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சர்வீஸ் சென்டரின் ெஷட்டர் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பார்த்த போது, சர்வீசுக்கு வந்த ஸ்கூட்டர்கள், பைக்குகள் எரிந்து கொண்டிருந்தது. உடன், ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர்.
இந்த தீயில், 4 ஸ்கூட்டர்கள், 2 பைக்குகள் முற்றிலுமாக எரிந்து சேதமானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக, தீயணைப்பு வீரர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.