
திருவெண்ணெய்நல்லுார், ஏப். 28-
திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைப்பாளையம் தர்மராஜ திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் மகாபாரத கதையை மையமாக வைத்து 22 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு அரவாண், வீரபத்திரன் சுவாமி வீதியுலாவும், 10:00 மணிக்கு அரவாண் சிரசு ஏற்றும் நிகழ்ச்சியும், அரவாண் களப்பலியும், 11:00 மணி முதல் 1:00 மணி வரை மகாபாரத பஞ்சபாண்டவர்கள்வர்கள் கதையை மையமாக கொண்ட மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நடக்கிறது.
தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு திமீதி திருவிழா நடந்தது திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

