நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : மயிலம் அடுத்த செண்டூர் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதித் திருவிழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 16ம் தேதி இரவு துரியோதனன் படுகள காட்சியை தெருக் கூத்து கலைஞர்கள் நாடகமாக நடித்து காண்பித்தனர்.
நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு தேன், இளநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது.
பின், மாலை 6:00 மணியளவில் தீ மிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் ஊராட்சி தலைவர் முருகன் உட்பட விழாக் குழுவினர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.