/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
/
முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 11, 2024 02:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி சூர்யா மேலாண்மைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த விழாவிற்கு, நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். முன்னதாக கல்லுாரி முதல்வர் பாலாஜி வரவேற்றார்.
விழாவில் முன்னாள் மாணவர் ஆர்சிட் பிளை கிளை மேலாளர் ஜனார்த்தனன், பேராசிரியர் ஆஷ்லே பொன்னி, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் ஆகியோர் மாணவர்ககளை வாழ்த்தி பேசினர்.
கல்லுாரி முதல்வர்கள் அன்பழகன், வெங்கடேஷ், மதன் கண்ணன், துணை முதல்வர் ஜெகன், அனைத்துதுறை கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் பங்கேற்றனர்.