ADDED : மார் 09, 2025 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் வீரன் மகன் முருகன். திண்டிவனம் கிளைச்சிறை அலுவலக உதவியாளராக பணியாற்றி, சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர், பண்ருட்டி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த சுந்தர்ராஜ், 35; என்பவருக்கு, அரசு துறையில் அலுவலக உதவியாளர் பணி வாங்கித் தருவதாகவும், சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரியை தெரியும் என, கூறியுள்ளார். அதை நம்பிய சுந்தர்ராஜ், கடந்த 2022ல் 5 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் கடந்தும் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதுகுறித்து சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து முருகனை தேடி வருகின்றனர்.