/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச பஸ் பாஸ் புதுப்பிக்கும் முகாம் ஒத்திவைப்பு
/
இலவச பஸ் பாஸ் புதுப்பிக்கும் முகாம் ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 19, 2024 01:11 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக, இலவச பஸ் பாஸ் புதுபித்தலுக்கு அறிவிக்கப்பட்ட முகாம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், 2024-25ம் நிதியாண்டில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், அரசு பஸ்களில் கட்டணம் ஏதுமின்றி, மாவட்டம் முழுவதும் சென்று வருவதற்கான இலவச பஸ் பயண அட்டையை புதுபிக்கும் முகாம் நாளை 20 மற்றும் 21ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் பின்பற்றப்படுவதால், அறிவித்த நாட்களில் முகாம் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுகிறது.
மீண்டும், முகாம் நடைபெறும் தேதி விபரத்தினை இடைத்தேர்தல் முடிந்த பின் அறிவிக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.