/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இலவச புற்று நோய் மருத்துவ முகாம்
/
இலவச புற்று நோய் மருத்துவ முகாம்
ADDED : மார் 02, 2025 04:16 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஜெயம் நலம் மருத்துவமனை, கோஸ்ட் லயன்ஸ் சங்கம், புதுச்சேரி சி-ஸ்குயர் கேன்சர் கேர், சென்னை என்.ஜி.எம்., புற்றுநோய் மருத்துவமனை சார்பில் இலவச புற்றுநோய் மருத்துவ முகாம் நடந்தது.
ஜெயம் நலம் மருத்துவமனையில் நடந்த முகாமிற்கு, கோஸ்ட் லயன்ஸ் சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஜங்ஷன் கிளப் தலைவர் கோபு முகாமை துவக்கி வைத்தார். காமதேனு லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்செல்வன், செயலாளர் குமார், ஆடிட்டர் பழனியப்பன், மாவட்ட தலைவர் கோபி முன்னிலை வகித்தனர்.
முகாமில், பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட பொதுமக்களை, புற்றுநோய் நிபுணர்கள் தாமோதிர குமரன், இளவரசி, பாலாஜி ரமணி ஆகியோர் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினர்.