குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது
குரூப் 1 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கியது
ADDED : ஜூன் 03, 2026 11:43 PM

விழுப்புரம்: விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துங்கி நடந்துவருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டு திட்ட நிரலின்படி, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 பதவிகளுக்கான காலியிடங்களுக்கு இந்த மாதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 முதல்நிலை தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நேற்று முதல் துவங்கியது.
இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் துவக்கி வைத்தார். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகன், உதவியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தனர். கடந்தாண்டு நடந்த குரூப் 1 தேர்வில் வென்ற ஜீவா, மவ்னிகா ஆகியோர் பங்கேற்று, அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வருவோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர்.
பயிற்சியாளர் ஆனந்த், பயிற்சி அளித்தார். காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்த பயிற்சி வகுப்பில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி, தேர்வு நடக்கும் வரை தொடர்ந்து நடந்துவருகிறது.
