ADDED : மே 13, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி ராஜகிரி கோட்டை கமலக்கன்னியம்மன் தேர்திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் ராஜகிரி கோட்டைக்குள் செல்ல 10 நாட்கள் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில், சித்திரை தேர் திருவிழா இன்று 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 22ம் தேதி வரை 10 நாட்களுக்கு விழா நடைபெறும்.
விழாவை முன்னிட்டு 10 நாட்களும் செஞ்சி நகர மக்கள் பொங்கல் வைக்கவும், கரகம் எடுக்கவும், நேர்த்தி கடன் செய்யவும் இங்குள்ள கமலக்கன்னியம்மன் கோவிலுக்குச் செல்வர்.
பாரம்பரிய விழாவின் போது ஆண்டு தோறும் இந்திய தொல்லியல் துறை ராஜகிரி கோட்டைக்குள் செல்ல கட்டணம் வசூலிப்பதில்லை.
அதன்படி இன்று முதல் 22ம் தேதி வரை செஞ்சி ராஜகிரி கோட்டைக்கு செல்வதற்கு கட்டணமில்லை.