sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செவிலியர்களுக்கு இலவச அயல் நாட்டு மொழிப் பயிற்சி

/

செவிலியர்களுக்கு இலவச அயல் நாட்டு மொழிப் பயிற்சி

செவிலியர்களுக்கு இலவச அயல் நாட்டு மொழிப் பயிற்சி

செவிலியர்களுக்கு இலவச அயல் நாட்டு மொழிப் பயிற்சி


ADDED : மே 30, 2024 11:05 PM

Google News

ADDED : மே 30, 2024 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில் செவிலியர்களுக்கு இலவச அயலக மொழிப்பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமாக பொது மற்றும் மறுவாழ்வு துறையின் நிர்வாக கட்டுபாட்டில் இயங்குகிறது.

இந்த நிறுவனம் சார்பில் 11 ஆயிரத்து 62 திறன் மற்றும் திறனற்ற தொழில்முறை பணியாளர்கள் ஆஸ்திரேலியா, பக்ரைன், கனடா, குவைத், ஓமன் சுல்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, லிபியா நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும், 5,500க்கும் மேற்பட்ட மருத்துவம், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் சவுதிய அரேபியாவின் சுகாதார அமைச்சகம் மற்றும் அதிகளவில் வீட்டு பணியாளர்களை குவைத்திலும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஜப்பன், ஜெர்மன் மற்றும் யு.கே., நாடுகளில் பணிபுரிய விரும்பும் செவிலியர்கள் அயல்மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால் ஜப்பான், ஜெர்மன் மொழிகளுக்கான இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்பு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இலவச அயல் மொழிப்பயிற்சி வகுப்புகளில் சேர விரும்பும் செவிலியர்கள் சமூக வலைதளம் அல்லது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தங்களின் பெயர்களை பதியலாம்.

வாட்ஸ் ஆப் எண் 6379179200, https://omcmanpower.tn.gov.in மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் 044-22502267, 22505886 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us