/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா
/
மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா
ADDED : மார் 10, 2025 05:49 AM
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த குரும்பன்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
விழாவிற்கு, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஆணைய ஆலோசகர் தீபக் தலைமை தாங்கினார்.
டிசம்பர் 3 இயக்க மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். மகளிரணி செயலாளர் தமிழரசி வரவேற்றார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., மாற்றுத் திறனாளிகள் 32 பேருக்கு, இலவச மனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, அவைத் தலைவர் கண்ணப்பன், பொதுக்குழு சம்பத், பி.டி.ஓ., முல்லை, ஊர்க்காவல் படை மண்டல தளபதி நத்தர்ஷா, ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராஜசேகர், சமூக நல அமைப்பு பாபு செல்வதுரை, ஸ்ரீதர், குணசேகரன், மாற்றுத் திறனாளிகள் சங்கம் மாரிமுத்து, வேலாயுதம், மோகன்ராஜ், பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

