ADDED : மே 13, 2024 05:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: ஆரோவில் கிராம செயல் வழிக்குழு, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் கொடூர் கிராமத்தில் நடந்தது.
முகாமை, ஆரோவில் கிராம செயல்வழிக்குழு திட்ட இயக்குனர் ஜெரால்டு மோரீஸ், ஊராட்சி தலைவர் கனகராஜ் துவக்கி வைத்தனர். இதில், டாக்டர்கள் ஷியாம், ஷிவானி, ஹரி ஆகியோர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பொது மக்களுக்கு பரிசோதனை செய்து, ஆலோசனை மற்றும் மருந்துகளை வழங்கினர்.
இதில், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, கண்புரை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், இ.சி.ஜி., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.
ஊராட்சி செயலாளர் வேலு, பிம்ஸ் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் துரைசாமி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.