/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்
/
விழுப்புரத்தில் நாளை இலவச மருத்துவ முகாம்
ADDED : செப் 08, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மகாதேவன் நகர், கணபதி கோவிலில், நாளை கண் சிகிச்சை முகாம் நடக்கிறது.
விழுப்புரம் மகாதேவன் நகர், சீனிவாசா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில், நாளை 9ம் தேதி நடைபெறும் முகாமிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்குகிறார்.
சரோஜினி கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சார்பில் நடைபெறும் முகாமில், புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பொதுமக்களுக்கு கண் பரிசோதனை மற்றும் பொதுமருத்துவ பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்க உள்ளனர்.