ADDED : மே 03, 2024 05:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : நண்பன் இறந்த அதிர்ச்சியில் தொழிலாளி இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த அரகண்டநல்லுாரை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் கமல்ராஜ்,42; டீக்கடை நடத்தி வந்தார். இவரது நண்பர் அதேபகுதியை சேர்ந்த தேவ் மகன் ஞானவேல்,42; சாக்கு தைக்கும் தொழிலாளி. இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இந்நிலையில் கமல்ராஜ் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவலை நேற்று மாலை அறிந்த அவரது உயிர் நண்பரான ஞானவேல் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இறப்பிலும் இணைபிரியாத நண்பர்களின் நட்பு அப்பகுதி மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.