/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
/
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 31, 2024 03:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
போலீஸ் ஸ்டேஷனில் நடந்த கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் காத்தமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தேவநாதன் வரவேற்றார்.
கூட்டத்தில் விக்கிரவாண்டி போலீஸ் சரகத்தில் விநாயகர் சிலை வைப்பவர்களுக்கு முன் அனுமதி, விதிமுறைகள் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. போலீசார் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விநாயகர் சிலை வைத்து வழிபடுவோர்கள் பங்கேற்றனர்.