/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலையோரத்தில் குப்பை பொதுமக்கள் அவதி
/
சாலையோரத்தில் குப்பை பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 27, 2024 11:47 PM

விழுப்புரம்: விழுப்புரம் பாப்பான்குளம் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
விழுப்புரம், பாப்பான்குளம் செல்லும் சாலை வழியாக, செஞ்சி புறவழிச் சாலையில் ஏரளமான வாகனங்கள் செல்கின்றன. இது மட்டுமின்றி, சாலையருகே குடியிருப்புகள், கடைகள், மசூதி உள்ளிட்டவை உள்ளன.
இந்த சாலையோரத்தில், கடந்த பல நாட்களாக குப்பைகள் தேங்கியுள்ளது. வாகனங்களில் செல்வோர் பலரும், தங்கள் வீட்டு குப்பைகளை பைகளில் கொண்டு வந்து இங்கு வந்து போட்டுச் செல்கின்றனர். இது மட்டுமின்றி, இறைச்சி கழிவுகளை, வியாபாரிகள் கொட்டுகின்றனர்.
இதனால், அந்த குப்பை குவியல்களில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளை பன்றிகள் கிளறுவதால், ஏற்படும் சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைகளை அப்புறப்படுத்தவும், குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.