ADDED : ஆக 27, 2026 07:43 PM
செஞ்சி: செஞ்சி, வல்லத்தில் த.வெ.க., அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடந்தது.
செஞ்சியில், மாவட்ட செயலாளர் குண சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
வல்லம் பகுதி நாட்டார்மங்கலம் கூட்டுரோட்டில் நடந்த கூட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் நிரஞ்சன் தலைமை தாங்கினார். தமிழக அரசின் 100 நாள் சாதனை குறித்து பேசினார்.
வல்லம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆண்டனி வரவேற்றார். வல்லம் மத்திய ஒன்றிய செயலாளர் ராகுல் காந்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், வடக்கு ஒன்றிய செயலாளர் கோபி கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். வல்லம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவசக்தி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் மயிலம் மற்றும் ஒலக்கூர் ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர் கோபால், மகளிர் அணி நிர்வாகி ரம்யா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயா, சேகர், விஜய் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
