/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கம்பன் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
/
கம்பன் ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பரிசு
ADDED : ஆக 08, 2024 11:15 PM

விழுப்புரம்: விழுப்புரம் கம்பன் கழகம் சார்பில், 41வது ஆண்டு கம்பன் விழா, விழுப்புரத்தில் கடந்த 2ம் தேதி துவங்கியது.
நேற்று முன்தினம் நடந்த 3ம் நாள் விழாவில், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கல்லுாரி தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். விழுப்புரம் முன்னாள் சேர்மன் ஜனகராஜ் முன்னிலை வகித்தார். லட்சுமணன் எம்.எல்.ஏ., புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். இதனையடுத்து, பட்டி மன்றம் நடந்தது.
ரோட்டரி, அரிமா நிர்வாகிகள் சிவக்குமார், கோபி, ராஜா, கோபு, ராமமூர்த்தி, சோழன், தமிழ்ச்செல்வன், ஏழுமலை, கந்தன், உலகதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
கம்பன் கழக துணை தலைவர் செந்தில் நன்றி கூறினார்.