/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி
/
கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி பலி
ADDED : ஆக 26, 2024 12:06 AM
விழுப்புரம்: வானுார் அருகே கல் குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி இறந்தார்.
வானுார் அடுத்த திருவக்கரை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கஸ்பர், 40; கட்டட தொழிலாளி. இவரது மனைவி அமலா, 35; மகள் ஹலானா, 6; இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் விளையாடிக் கொண் டிருந்த ஹலானாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
வானுார் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து வந்து, 12 அடி ஆழமுள்ள கல் குவாரியில் குட்டையில் இரவு 9:00 மணியளவில், ஹலானா உடலை மீட்டனர்.
புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

