/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண் தற்கொலை தந்தை போலீசில் புகார்
/
பெண் தற்கொலை தந்தை போலீசில் புகார்
ADDED : ஆக 20, 2024 05:29 AM
மயிலம்: மயிலம் அருகே உள்ள சின்ன நெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முக சுந்தரம். இவரது மனைவி விஜயலட்சுமி, 30; இவர்களுடைய குடும்பத்தில் தகராறு இருந்துள்ளது.
இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு தனது வீட்டுக்கு வந்த கணவர் சண்முகசுந்தரம் கதவை திறந்து பார்த்த பொழுது மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஜெயலட்சுமிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இறந்த பெண்ணின் தந்தை குப்புசாமி தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறிய புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.