/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆடு திருடிய வழக்கு; மேலும் 3 பேர் கைது
/
ஆடு திருடிய வழக்கு; மேலும் 3 பேர் கைது
ADDED : ஜூன் 19, 2024 11:16 PM

மரக்காணம் : மரக்காணம் அருகே ஆடு திருடிய வழக்கில் மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம் அடுத்த கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் மூத்தி, 60. இவர் வீட்டின் அருகே இரண்டு பட்டியில் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட புதுச்சேரி மாநிலம், லாஸ்பேட்டையை சேர்ந்த அருண்பாண்டியன்,20; மணிகண்டன்,21; மற்றோரு மணிகண்டன்,27, உட்பட ஆறு பேர் கடந்த வாரம் பக்ரீத் பண்டிகைக்கு விற்பனை செய்ய 23 ஆடுகளை திருடி சென்றனர்.
புகாரின் பேரில், இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து, மணிகண்டன், அருண்பாண்டியன், மற்றுமொரு மணிகண்டன் ஆகியோரை கைது செய்து, ஆடுகளை பறிமுதல் செய்தனர். அதன் பின் ஆட்டின் உரிமையாளர் மூர்த்தியிடம் ஓப்படைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மூவரை தேடி வந்தனர்.
நேற்று மதியம் திண்டினம் நத்தமேட்டு பகுதியில் பதுங்கி இருந்த அதேப் பகுதியை சேர்ந்த அய்யம்பேட்டையன் மகன் பிரபு,37; புதுச்சேரி, லாஸ்பேட்டையை சேர்ந்த சங்கர் மகன்கள் செல்வமணி, 24; அர்ஜூன்,22; ஆகிய மூன்று பேர்களை பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர்.