/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டி சாதிக்கும் அரசு நிதியுதவி பள்ளி மாணவர்கள்
/
தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டி சாதிக்கும் அரசு நிதியுதவி பள்ளி மாணவர்கள்
தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டி சாதிக்கும் அரசு நிதியுதவி பள்ளி மாணவர்கள்
தேசிய, மாநில அளவில் விளையாட்டு போட்டி சாதிக்கும் அரசு நிதியுதவி பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 08, 2024 12:46 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துாரில் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி மாணவர்கள் தேசிய, மாநில அளவிலான விளையாட்டுகளில் சாதனை படைத்துள்ளனர்.
விக்கிரவாண்டி ஒன்றியம் முட்டத்துார் கிராமத்தில் அரசு நிதி உதவி பெற்று இயங்கி வருகிறது. ஒய்க்காப் மேல்நிலைப்பள்ளி.இப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமார். இவரது பயிற்சியின் காரணமாக இப்பள்ளி மாணவ, மாணவிகள் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்களையும், கோப்பைகளையும் வென்று சாதனைகள் படைத்து வருகின்றனர்.
எஸ்.ஜி.எப்.ஐ., இந்திய பள்ளி குழுமம் ,தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்திய கைப்பந்து போட்டியில் பள்ளி மாணவிகள் காவியா, அபிநயா, சுமித்ரா தேவி ஆகிய மூவரும், ரக்பி போட்டியில் மாணவர்கள் மகேஸ்வரி, ரம்யா, காவியா, சுரேஷ், வினிதா, ரக் ஷயா, பவானி, ஆனந்த் ,சிலம்பம் போட்டியில் மாணவர் விக்னேஷ் ஆகியோரும் வென்று சாதித்துள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான 19 வயதுக்குட்பட்டோர் பூப்பந்தாட்டம் குழு விளையாட்டு போட்டியில் மாணவிகள் மூன்றாம் இடத்தை பெற்று வெண்கல பதக்கமும் கோப்பையும் கைப்பற்றினர். மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கமும், கோப்பையும் கைப்பற்றினர்.
ஆண்கள் பிரிவில் நான்காம் இடம் பிடித்தனர். மாநில அளவிலான 19 வயதிற்குட்பட்ட தடகளப் போட்டியில் மாணவி பிரியதர்ஷினியும், 17 வயதிற்கு ட்பட்ட பிரிவில் மாணவன் சிவராமன், மாணவி வினோதினி ஆகியோரும்,கைப்பந்து போட்டியிலும் மாணவ மாணவிகளும், கோ-கோ போட்டியில் மாணவர்களும் பங்கேற்று வென்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க பள்ளியின் மேலாளர், தாளாளர் பேராசிரியர் ஸ்டான்லி ஜோன்ஸ், தலைமை ஆசிரியர்ஜாக்குலின் ஆசநாத், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர், முன்னாள் விளையாட்டுத்துறை மாணவ, மாணவிகள் உதவிகளை செய்து வருகின்றனர்.